#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மர்மமான முறையில் பந்து போட்டு விக்கெட்டை எடுத்த அஸ்வின்! வைரலாகும் வீடியோ!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததை அடுத்து மினி ஐபில் என்று அழைக்கப்படும் TNPL கிரிக்கெட் போட்டிகள் கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 8 அணிகள் விளையாடும் இந்த தொடரின் இறுதி போட்டி வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் திண்டுக்கல் அணிக்கு தலைமையேற்று அந்த அணிக்காக விளையாடிவருகிறார். சுழற் பந்து வீசுவதில் திறமையான அஸ்வின் இந்த TNPL தொடரில் வித்தியாசமாக பந்து வீசி விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
சிறுவர்கள் விளையாடும்போது வேகமாக வந்து மெதுவாக பந்து போடும் முறையை பயன்படுத்திதான் அஸ்வின் இந்த விக்கெட்டை எடுத்துள்ளார். இதுகுறித்து வெளியான வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.