மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய அணிக்கு காத்திருக்கும் ஸ்டார் பவுலர்.! ஜூனியர் உலகக்கோப்பையில் அசத்திய ரவிகுமார்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!
இங்கிலாந்துக்கு எதிரான ஜூனியர் உலக கோப்பை(ICC U19 உலகக்கோப்பை) இறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவிகுமாரின் அசத்தலான பந்து வீச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ICC U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர் ரவிகுமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்ற நிலையில் முதல் ஓவரின் 5வது பந்தில் ரவிகுமார் வீசிய பந்தில் ஜாக்கப் பெத்தல் எல்.பி. டபிள்யூ ஆகினார்.
முக்கிய ஆட்டங்களில் ரவிகுமார் தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். காலிறுதியில் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலும், அரையிறுதியில் முதல் ஓவரின் முதல் பந்திலும், இறுதிப் போட்டியில் முதல் ஓவரின் 5வது பந்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரவிகுமார் இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் நட்சத்திர பந்து வீச்சாளர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.