53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பெங்களூரு அணிக்கு ஆப்பு வைக்க முக்கிய வீரரை முதல் முறையாக களமிறக்கும் பஞ்சாப்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.
பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் சிக்ஸர் மன்னன் பஞ்சாப் அணி வீரர் கெயில் களமிறங்குகிறார்.
ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 30 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் இன்று நடைபெறும் 31 வது ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது.
அதேபோல் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி இன்று வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு செல்ல முனைப்புடன் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் மிகவும் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. அதேநேரம் இந்த சீசனில் ஒரு போட்டிகளில் கூட களமிறங்காத பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து தற்போது பெங்களூரு அணி பேட்டிங் செய்துவருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் களமிறங்கியுள்ளதால் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி நிச்சயம் வெற்றிபெறும் என பஞ்சாப் அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.