குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுமாறியதற்கு இந்திய அணியின் இந்த ஒற்றை வீரர் தான் காரணம்.! ரிக்கி பாண்டிங் ஓப்பன் டாக்.!
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில் T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாளான நேற்று அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்களை எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி நேற்று முதல் இன்னிங்சை துவக்கியது. ஆஸ்திரேலிய அணி 72.1ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்தை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். 2-வது நாள் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறுகையில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சில் ஆக்ரோஷத்துடன் விளையாடுவது போல் தெரிந்தது. அவர்கள் அஸ்வினை குறைவாக மதிப்பிட்டு விட்டனர். அது தான் அவர்களுக்கு பாதகமாக அமைந்து விட்டது என கூறியுள்ளார்.