தனி ஒருவனாக அசத்திய ரோஹித் சர்மா! அவருடன் இணைந்த வின்னிங் சாட் தோனி! பரபரப்பான கிளைமாக்ஸ்!



rohit-and-ms-dhoni-going-victory-face


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் லீக் ஆட்டத்தில் இன்று, தென்ஆப்ரிக்க அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.  இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியில் சமி, ஜடேஜா, விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நான்காவது பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் இறங்குகிறார். காயம் காரணமாக சென்ற ஆட்டத்தில் ஓய்வெடுத்த ஆம்லா இன்று ஆடுகிறார்.

india vs sA

தென்னாப்பிரிக்கா அணியின் டிகாக் மற்றும் ஆம்லா துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்துடன் விளையாடியது. முதல் இரண்டு விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்  பும்ரா வீழ்த்தினார்.

அதன்பிறகு நிலைத்து நின்று ஆட முயன்ற டூப்ளஸிஸ்(38 ) மற்றும் டூசன்(22 ) ஆகியோர் சாகலின் சூழலில் சிக்கி தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய 
டுமினியை தனது பங்கிற்கு குல்தீப் யாதவ் 3 ரன்களில் வெளியேறினார். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்தது. 

india vs sA

இந்தநிலையில்  228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ஆரம்பத்திலே அதிர்ச்சியளித்தார். அவர் 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தநிலையில் ரபடா ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 34 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். 

துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடி தற்போது வரை ஆட்டமிழக்காமல் 114 ரன்களை எடுத்துள்ளார். அவருடன் இணைந்த தல தோனி சிங்கம்போல  ஆடிவருகிறார். இந்திய அணி 44 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 198 ரன்களை எடுத்துள்ளது.