ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
எல்லை கோட்டில் பந்தை தட்டி தட்டி பிடித்து அசத்தல் கேட்ச்! ரசிகர்களை மிரள வைத்த ரோஹித்!
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதன் படி டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அப்போது முதல் இன்னிங்ஸில் 7வது ஓவரை இந்திய அணியின் பந்துவீச்சாளர் சிவம் துபே வீசும்போது அதனை நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் குப்தில் பந்தை பறக்க விட்டார். அப்போது எல்லை கோட்டிற்கு மிக அருகே பந்தை கேட்ச் பிடித்தார் ரோகித் ஷர்மா.
Super catch Rohit👏👏👏 @ImRo45 pic.twitter.com/asZB51JbbI
— 🔥Anvesh(N.T.R)🔥 (@anvesh_tony) January 24, 2020
அவர் அடித்த பந்து எல்லைக்கோட்டை தொடவிருந்த நிலையில் பந்தை மேலே வீசி, பின்னர் மீண்டும் கேட்ச் பிடித்து அசத்தினார் ரோஹித். இது டி-20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சிவம் துபே எடுத்த முதல் விக்கெட்டாக அமைந்தது. இந்தநிலையில் எல்லை கோட்டில் அசத்தல் கேட்ச் பிடித்த ரோஹித் ஷர்மாவை சக வீரர்களும், ரசிகர்களும் பாராட்டினர்.