மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயிற்சியின்போது வேகமாக வந்த பந்து தாக்கி ரோகித் சர்மா காயம்! ஆட்டத்தில் பங்குபெறுவாரா?
வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, டெல்லியில் நாளை நடக்கிறது. இந்தநிலையில் இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று சக வீரர்களுடன் இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டார்.
வங்கதேச இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானின் பந்துவீச்சை சமாளிக்கும் வகையில் பயிற்சிக்காக இலங்கையை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் அழைக்கப்பட்டு இருந்தார். அவர் வேகமாக வீசிய பந்து ரோகித் சர்மாவின் தொடையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது. இதனால் ரோகித் சர்மா பயிற்சியை பாதியில் கைவிட்டு சென்று சிகிச்சை பெற்றார்.
இதனையடுத்து ரோஹித் சர்மாவின் காயத்தன்மை குறித்து பரிசோதித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு, அவர் உடல்தகுதியுடன் இருப்பதாகவும், முதலாவது ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.