பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இதை தான் பின்பற்றுவோம் - ரோகித் சர்மா தடாலடி



Rohit sharma about todays match

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் 14வது ஆட்டம் இன்று புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நடைபறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

கடந்த ஆண்டில் வலிமையிழந்ததாக காணப்பட்ட ஆஸ்திரேலிய அணி இப்பொழுது திடீர் உத்வேகத்துடன் தொடர்ந்து 10 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஓராண்டுகள் தடையிலிருந்த வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்கு திரும்பியிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

wc2019

இதுவரை இரு அணிகளும் உலகக் கோப்பை தொடர்களில் 11 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் ஆஸ்திரேலியா 8 போட்டிகளிலும் இந்திய அணி 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. இதிலும் குறிப்பாக லீக் ஆட்டங்களில் இதுவரை இந்திய அணி ஆஸ்திரேலியாவை 1987க்கு பிறகு வென்றதில்லை.

இந்நிலையில் இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, "இதுவரை நடந்தவற்றை பற்றி நாங்கள் எண்ணுவதில்லை, இரண்டு அணியிலுமே ஆட்டத்தை சட்டென்று மாற்றக்கூடிய திறமை படைத்த இரண்டு மூன்று பேர் உள்ளனர்.

wc2019

இரண்டு அணிகளுக்கும் இடையே பல வெற்றி தோல்விகள் குறித்த கதைகள் உள்ளன. நாங்கள் ஆஸ்திரேலியாவில் அவர்களை வென்றோம்; அவர்கள் எங்களை இந்தியாவில் வென்றார்கள். எனவே இன்றைய ஆட்டத்தில் வெல்ல என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவோம்" என்றார்.