மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ட்ரைவர் இல்லாத காரில் பயணம் செய்த சச்சின்! வைரலாகும் திரில் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பாவான் சச்சின் டெண்டுல்கர் ட்ரைவர் இல்லாத ஆட்டோமேடிக் காரில் பயணம் செய்யும் வீடியோவை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், "என்னுடைய கார் தானாகவே பார்க்கிங் செய்துகொள்ளும் ஒரு திரில்லான அனுபவம். மிஸ்டர் இந்தியா அனில் கபூர் படத்தில் காரை ஓட்டியது போன்ற ஒரு அனுபவம். இனிவரும் வார நாட்களில் என் நண்பர்களும் இந்த திகில் அனபவத்தை பெறுவார்கள் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசியுள்ள சச்சின், "ட்ரைவரே இல்லாமல் எனது கார் தானாகவே ஸ்டார்ட் ஆகி பார்க் செய்ய போகிறது. எனது காரை தானாகவே பார்க்கிங் செய்ய முயற்சி செய்யப் போகிறேன். ட்ரைவர் இல்லாமல் எனது காரினை முதல் முறையாக பார்க்கிங் செய்கிறேன்" என பேசியுள்ளார்.
Mr. India always parks like a pro! 😝
— Anil Kapoor (@AnilKapoor) August 2, 2019
This driverless parking technology is amazing! @sachin_rt https://t.co/Mr1myxTE8J
மிஸ்டர் இந்தியா எனும் ஹிந்தி படத்தில் நடித்த அனில் கபூர் இதே போன்ற காட்சிகளில் நடித்துள்ளார். இந்த சச்சினின் இந்த வீடியோவிற்கு அவர் பதிலளித்துள்ளார்.