சச்சின் சார்... வயசானாலும் உங்க அழகும், ஸ்டெயிலும் மாறவே இல்ல.! சச்சின் வெளியிட்ட வீடியோவுக்கு குவிந்துவரும் பாராட்டுக்கள்!



sachin shared his tennis video

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் சிறந்த தொடக்க வீரராக உருவெடுத்து எண்ணற்ற சாதனைகளை படைத்தார். 1989-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த சச்சின் தெண்டுல்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

சச்சினுக்கு டென்னிஸ் ஆட்டத்தின் மீது அதிக ஆர்வம். இதனால் சச்சின் ஆண்டுதோறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் வழக்கம் உடையவர். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), தெண்டுல்கருக்கு பிடித்தமான டென்னிஸ் வீரர் ஆவார். 

இந்தநிலையில் சச்சின், தான் டென்னிஸ் விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். அந்த வீடியோவில் தெண்டுல்கர் ‘போர் ஹேண்ட்’ ஷாட் அடிப்பது இடம் பெற்றுள்ளது. தனது ‘போர் ஹேண்ட்’ ஷாட்டை மேம்படுத்த ஆலோசனை எதுவும் இருக்கிறதா? என்று கேள்வி விடுத்து இருக்கிறார். சச்சின் பதிவிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும், ஸ்டெயிலையும், அழகையும் புகழ்ந்து வருகின்றனர்.