நல்லா வளர்ந்துருச்சு..! தனக்கு தானே முடிவெட்டிக்கொண்ட சச்சின்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.



 Sachin Tendulkar gave himself a haircut amid COVID-19 lockdown

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனக்கு தானே முடிவெட்டிக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணத்தால் பிரபலங்கள் தொடங்கி, சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மேலும், பெரும்பாலான தொழில்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், தனது முடியை தானே வெட்டியுள்ளார். தனக்கு தானே முடிவெட்டும் புகைப்படத்தை சச்சின்  தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.