தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சச்சினின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று.. அப்படி என்ன நாள் தெரியுமா?
கிரிக்கெட் என்றாலே இன்னும் பல தலைமுறைகள் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு சாதனைகளை படைத்தவர் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
சச்சினின் இத்தனை சாதனைகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்ட நாள் தான் இன்று. ஆகஸ்ட் 14, 1990 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் சச்சின் தனது முதல் சர்வதேச சதத்தினை விளாசினார்.
அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆறாவது வீரராக களமிறங்கிய சச்சின் 189 பந்துகளை சந்தித்து 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி அந்த போட்டியினை டிரா செய்ய சச்சினின் சதம் பெரிதும் உதவியாக இருந்தது.
தனது முதல் சதத்தினை அடிக்கும் போது சச்சினின் வயது 17 வருடம் 112 நாட்கள். குறைந்த வயதில் சதமடித்தவர்கள் பட்டியலில் சச்சின் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும்பொழுது 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதம் அடித்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 49 சதம் என சர்வதேச அளவில் 100 சதங்களை அடித்துள்ளார் சச்சின்.