மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காஷ்மீர் பெண்ணை கரம்பிடித்த பிரபல கிரிக்கெட் வீரர்.! வைரலாகும் வீடியோ.!
மும்பை அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக அபாரமாக ஆடி பல சதங்களை குவித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் 2021-22 ரஞ்சி டிராபி சீசனில் 982 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல் 2022-23 ரஞ்சி டிராபி தொடரில் மூன்று சதங்களை அடித்து 556 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட சர்ஃபராஸ் கானுக்கு ஐபிஎல்- லில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் தற்போது ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சிறந்த வீரர் சர்ஃபராஸ் கானுக்கு சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து பெரும் சர்ச்சை கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.
Delhi Capitals batter Sarfaraz Khan gets married in Kashmir" #viralvideo #SarfarazKhan #viralpost #funny #videoviral pic.twitter.com/PXTZ2JCFvb
— Nadeem khan (@Nadeem2khan1) August 7, 2023
இந்தநிலையில் மும்பையை சேர்ந்த சர்பராஸ் கான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சர்ஃபராஸ் கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.