மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் தெறிக்க விட்ட சச்சின் சேவாக் கூட்டணி! வயசானாலும் அதே ஸ்டெயில், அதே மரண அடி!
சாலை விழிப்புணர்வுக்காக முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் சச்சின் சேவாக் விளையாடி வருகின்றனர்.
ஒருகாலகட்டத்தில் சச்சின் சேவாக் இருவரும் அண்ணன் தம்பி போலவே இந்திய அணியில் அதிரடியாக ஆடினார்கள். அணைத்து ஆட்டத்திலும் பொறுப்பாக ஆடுகின்ற சச்சின், தம்பிக்கு அறிவுரை கூறுவது போலவே, இத பன்னாத அத பன்னாத என்று சேவக்கிடம் கூறுவார். ஆனாலும் சேவக் விளையாடுவது நீங்கள் என்ன கூறினாலும் நான் பன்றத தான் பன்னுவேன்னு சொல்வதுபோல, அசால்ட்டாக அடிச்சு துவம்சம் செய்வார் சேவக்.
இருமுனை கத்தி போல பாயும் இவர்கள் களத்தில் இருக்கும்பொழுது எதிரில் எந்த அணியாக இருந்தாலும் கண்டிப்பாக அவர்களுக்கு கலக்கம் ஏற்படும். அந்த அளவிற்கு இருந்தது இவர்களின் ஜோடி. சில சமயங்களில் இவர்களில் யார் பவுண்டரி அடித்தார் என்று கூட சந்தேகம் ஏற்படும். அந்த அளவிற்கு ஒத்துப்போகும் இவர்களின் பேட்டிங் ஸ்டெயிலும்.
அந்த இருமுனை கத்தி போல பாயும் இரண்டு வீரர்களின் ஆட்டம், காலம் முழுவதும் எதிர் அணிக்கு பயத்தை ஏற்படுத்திய ஜோடி என்றே கூறலாம். இந்த ஜோடி தற்போது மீண்டும் களத்தில் இறங்கி ஆடிவருகின்றனர். சாலை பாதுகாப்பு "ரோட் சேப்டி சீரியஸ்" முலம் இருவரும் களமிறங்கியுள்ளனர். வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த ஜோடியின் வாணவேடிக்கைகளை அணைத்து ரசிகர்களும் ரசிக்கலாம்.