அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக தேர்வாகியுள்ள இந்தியர்; வெளியான பரபரப்பு தகவல்.!



sawreb netravelker - india america captan

வல்லரசு நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்கா கிரிக்கெட் அணிக்கு இந்தியாவை சேர்ந்த சவுரப் நெட்ராவல்கர்  கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக இடம் இடம்பெற்றவர் சவுரப் நெட்ராவல்கர். 

அந்த தொடரில் தனது திறமையான பந்து வீச்சின் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பெரும்பங்கு வகித்தார். இந்த நிலையில் தொடர் நிறைவடைந்ததும் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பை முடித்ததும் வேலைக்காக அமெரிக்கா சென்று ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

tamilspark

இந்த நிலையில் ஓய்வு கிடைக்கும்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். அவருடைய திறமையை கண்ட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அமெரிக்காவில் சேர்த்து அணியில் தற்போது அவரை அந்த அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளது.

இதுகுறித்து கூறிய அவர், அமெரிக்க அணியின் கிரிக்கெட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அணியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.