மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவர பாத்தா அப்டியே என்னோடே பேட்டிங் மாதிரி இருக்கு..!! அந்த பையன்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.. இளம் வீரரை புகழ்ந்துதள்ளிய சேவாக்..
இந்திய அணியின் இளம் வீரரை பாராட்டி தள்ளியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் தொடங்கி, தற்போது இங்கிலாந்து அணியுடனா போட்டிகள் வரை மிக சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிஷப் பண்ட். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடிவரும் இவரை ரசிகர்கள் தொடங்கி பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் ரிஷப் பண்ட் குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார். ரிஷப் பண்ட் விளையாடும் விதம் என்னுடைய ஆரம்ப நாட்களை நினைவுபடுத்துகிறது என கூறிய சேவாக், இந்திய அணியில் அவர் தொடர்ந்து நீடிப்பது தான் முக்கியம் என நான் கருதுகிறேன் என கூறியுள்ளார்.
மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றியெல்லாம் சிறிதுகூட யோசிக்காமல் தன்னுடைய விருப்பப்படி, பேட்டிங் செய்கிறார். குறிப்பாக மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய அவர் வரும் போது, அதன் பிறகு கிடைக்கும் பேட்டிங் பவர்பிளேவை திறம்பட பயன்படுத்தி அற்புதமாக விளையாடிவருகிறார் என கூறியுள்ளார்.
அதேநேரம் அவர் ஒன்றிரண்டு விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என கூறிய சேவாக், மிடில் ஆர்டரில் அவர் களமிறங்கும்போது 50 ஓவர்கள் வரை ஆட்டம் இழக்காமல் விளையாட அவர் கற்றுக்கொள்ளவேண்டும் எனவும், தற்போது அவர் அடித்துவரும் 70 , 80 ரன்களை 100 ரன்களாக மாற்றவேண்டும்.
இதை மட்டும் அவர் செய்து விட்டால், கிரிக்கெட் உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தான் என ரிஷப் பண்டை புகழ்ந்துதள்ளியுள்ளார் சேவாக்.