கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
தோனியை அணியில் சேர்ப்பதற்கு 10 நாட்கள் வாக்குவாதம்.! அடம்பிடித்த கங்குலி.! முன்னாள் வீரர் வெளியிட்ட தகவல்.!
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையையும் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. மேலும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக்கொடுத்தார் தல தோனி. இந்திய டெஸ்ட் அணியை நம்பர் ஒன் இடத்துக்கும் கொண்டு சென்றார்.
தோனியை விக்கெட் கீப்பராக முதலில் கண்டு பிடித்தவர் கிரண் மோரே. முன்னாள் விக்கெட் கீப்பரான அவர் 2002 முதல் 2006 வரை தேர்வுக்குழு தலைவராக பணியாற்றினார். அப்போதுதான் தோனி சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இந்தநிலையில், தோனி இந்திய அணியில் இடம் பிடித்தது தொடர்பில் இதுவரை வெளிவராத தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார் கிரண் மோரே.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்திய அணியில் ராகுல் டிராவிட்-க்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேடி வந்தோம். மேலும் அந்த மாற்று வீரர் துடுப்பாட்ட வரிசையில் 6 -7வது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டுப்பவராய் இருக்க வேண்டும் என எண்ணினோம். அப்போது தான் தோனியை விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரராக ஒரு உள்ளூர் போட்டியில் பார்த்தேன்.
அந்த அணியின் ஸ்கோர் 170 ஆக இருந்த நிலையில் தோனி மட்டுமே அதில் 130 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி அப்போது விளையாடி வந்த போட்டியில் தோனிக்கு விக்கெட் கீப்பர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கங்குலியிடம் கோரினேன். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் தீப் தாஸ்குப்தா ஏற்கனவே விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்தார். பின்னர் கங்குலியை சமாதானப்படுத்துவதற்கு எங்களுக்கு 10 நாட்கள் எடுத்துக்கொண்டது. அதன் பிறகு தோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்தது எல்லாம் வரலாறு என கூறியுள்ளார் கிரண் மோரே.