மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர்ந்து சிக்கலில் ரோஹித் சர்மா.. பிசிசிஐ நடவடிக்கை பாயுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா இந்திய அணியின் துணை கேப்டனாகவும் இருந்து வந்தார்.
ஆனால் ஐபிஎல் தொடரில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை காரணமாக காட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. ரோஹித் ஷர்மாவின் காயத்தின் தன்மை குறித்து இன்னும் சந்தேகம் நீடித்து வருகிறது.
அதேசமயம் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடியது சர்ச்சையாகி உள்ளது. அந்த போட்டியில் றன் ஓடுவதற்கு ரோஹித் சர்மா சிரமப்பட்ட நிலையில் அவருக்கு காயம் முழுவதும் சரியாவதற்கு முன்னரே அவசரப்பட்டு ஆடியுள்ளார் என முன்னாள் வீரர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்திய அணியை விட ஐபிஎல் தொடர் தான் அவருக்கு முக்கியமா? தொடர்ந்து இவ்வாறு காயத்துடன் விளையாடினாள் இந்திய அணியில் அவரின் பங்களிப்பு கேள்விக்குறியாகும். ரோஹித் ஷர்மாவின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து பிசிசிஐ அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.