சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
உலக நம்பர்-1 பந்துவீச்சாளரை அடித்து துவம்சம் செய்த 16 வயது இந்திய வீராங்கனை!
நேற்று சிட்னியில் துவங்கிய மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்திலேயே 16 வயது மட்டுமே நிரம்பிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா பலரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளார். தற்போதைய நம்பர்-1 பந்துவீச்சாளரான ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட்டின் ஒரே ஓவரில் 16 ரன்கள் அடித்து அசத்தினார்.
ஷட் வீசிய ஆட்டத்தின் 4 ஆவது ஓவரில் முதல் ஹாட்ரிக் பவுண்டரிகள் விளாசிய ஷபாலி கடைசி பந்திலும் ஒரு நான்கினை விளாசி 16 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய அவர் 6 ஆவது ஓவரில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.