#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரே ஓவரில் தலைகீழாக மாறிய ஆட்டம்; மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான சிவம் டூபே!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது டி20 போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் சிவம் டுபே.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது தடுமாறியது. நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டெய்லர் மற்றும் சைபர்ட் நிதானமாக ஆடினர்.
9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தனர். 10 ஆவது ஓவரை ஆல்ரவுண்டர் சிவம் டுபே வீசினார்.
அந்த ஓவரில் முதல் 2 பந்துகளில் 2 சிக்சர்களை விளாசிய சைபர்ட் 3 ஆவது பந்தில் 4 அடித்தார். 4 ஆவது பந்தில் சிங்கிள் அடிக்க டெய்லர் 5 ஆவது பந்தில் ஒரு 4 அடித்தார். மேலும் அந்த பந்து நோபால். அடுத்து 5 மற்றும் 6 ஆவது பந்திலும் டெய்லர் சிக்சர்களை விளாசினார்.
அந்த ஓவரில் மட்டும் சிவம் டுபே 34 ரன்களை விட்டுக்கொடுத்தார். டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பவுலர்கள் பட்டியலில் சிவம் டுபே முதலிடத்தை பிடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ஸ்டூவர்டு பின்னி(32), சுரேஷ் ரெய்னா(26) என உள்ளனர்.