ஆஷஸ் டெஸ்டில் நடந்த விபரீதம்! மைதானத்தில் சுருட்டு விழுந்த ஸ்டீவ் ஸ்மித்



smith curled up, hitting the neck area.


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய பவுண்சர் பந்து ஸ்டீவ் ஸ்மித்தின் கழுத்து பகுதியில் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார். 

லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் நான்காவது நாளான இன்று ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. 

ஆட்டத்தின் 77 ஆவது ஓவரை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். 80 ரன்கள் எடுத்து களத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்மித். அப்போது ஆர்ச்சர் வீசிய பவுண்சர் பந்து ஸ்டீவ் ஸ்மித்தின் கழுத்து பகுதியில் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார். 

களத்தில் இருந்த வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனே மருத்துவர்கள் உள்ளே வந்து ஸ்மித்தை பரிசோதித்தனர். அவர் நிதானமாக இருப்பதை உணர்ந்தனர். இருப்பினும் அவரை மருத்துவர்கள் வெளியில் அழைத்து சென்றனர். 


ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ் இதேபோன்று அடிபட்டு இறந்தது அனைவருக்கும் நினைவிற்கு வந்தது. ஆனால் நல்லமுறையில் பின்னர் 86 ஆவது ஓவரில் சிடில் ஆட்டமிழந்த பிறகு ஸ்மித் மீண்டும் களமிறங்கினார். ஆனால் வோக்ஸ் வீசிய 88 ஆவது ஓவரிலேயே 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஸ்மித்.