மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் வெற்றியை பதிவு செய்ய துடித்த தென் ஆப்பிரிக்கா! திடீரென நிறுத்தப்பட ஆட்டம்!
உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கோப்பையை வெல்ல மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகிறது. 14 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. இந்தநிலையில், உலகக் கோப்பை தொடரின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை ஆடிய ஆட்டத்தில் மூன்று தோல்விகளுடன் தடுமாறி வருகிறது. இந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஸ்டெயின் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இல்லை.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பேட்டிங்கை செய்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலே சொதப்பிய படி ஆடியது. இந்த அணியின் துவக்க வீரர் ஆம்லா 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதனையடுத்து களமிறங்கிய எயிடன் மார்க்ராம் 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். துவக்க வீரராக களமிறங்கிய டீ காக் 21 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையிலும், ப்ளசிஸ் 7 பந்துகளுக்கு ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்தநிலையில் 8 வது ஓவர் நடைபெறும் நிலையில் மழையின் காரணமாக ஆட்டம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.