#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணிக்கு கில்லராகிய மில்லர்.! தலை தொங்கிய இந்திய அணி.! பரபரப்பான ஆட்டம்.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷனும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் கடந்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 23 ரன்களும், ஸ்ரேயஸ் அய்யர் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியில் கேப்டன் ரிஷப் பண்ட் 29 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 31 ரன்களும் அதிரடியாக குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டி-காக், கேப்டன் தேம்பா பாவுமா, மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் இந்திய அணி வீரர்களின் பந்துகளை நாலாப்பக்கமும் சிதறடிக்க தென்னாப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டது.
ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 46 பந்துகளில், 75 ரன்களும், டேவிட் மில்லர், 31 பந்துகளில் 64 ரங்களையும் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்றனர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவுசெய்தது. நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்த டேவிட் மில்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.