இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு திடீர் தடை! சோகத்தில் மூழ்கிய இலங்கை ரசிகர்கள்!



srilanka player banned to play


இலங்கை அணியின் இளம் வீரர் அகில தனஞ்செயா, வலதுகை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேன் ஆவார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, இவரது பந்துவீச்சு சீராக இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தில் அவர் தனது பந்துவீச்சை நிரூப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அகில தனஞ்செயாவின் பந்துவீச்சு இயந்திர மதிப்பீடு மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனஞ்செயவின் பந்துவீச்சு முறை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரியில் இருந்து வெளியேறியுள்ளது. அத்துடன் 4 முதல் 17 டிகிரில் அவரது பந்துவீச்சு சீரற்றதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் ஐ.சி.சியின் இயக்க நிபுணர் மூலம் சரிபார்க்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தனஞ்செய 2020 ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி வரை பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு இரண்டாவது முறையாக விதிக்கப்படும் இடைநீக்கம் ஆகும். ஏற்கனவே, கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கை ரசிகர்கள் சற்று சோகத்தில் உள்ளனர்.