ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தனது 71-வது சர்வதேச சதத்தை அடிப்பார்.! அடித்து கூறும் இலங்கை வீரர்.!
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த நிலையில் இந்திய அணி 2-வது லீக் போட்டியில் ஹாங்காங் அணியை இன்று எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்குக்கே சாதகமாக இருப்பதால் 'டாஸ்' வெல்லும் அணி முதலில் பந்து வீசுவதற்கே முன்னுரிமை அளிக்கும். என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி தனது 71-வது சர்வதேச சதத்தை அடிப்பார் என இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா தெரிவித்துள்ளார்.