விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் யார்? பிரபல தொகுப்பாளினி பரபரப்பு பதில்!
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நீண்ட நாட்களாக இருந்து வருகிறார். 31 வயதாகும் விராட் கோலி குறைந்தது இன்னும் 5 வருடங்களாவது இந்திய அணிக்காக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போதைய ஐபிஎல் தொடரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தொகுப்பாளினியான நஸ்ப்ரீத் கவுர் சமீபத்தில் சமுக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினார்.
அதில் ரசிகர் ஒருவர் நஸ்ப்ரீத்திடம், "விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக யார் வரவேண்டும் என நினைக்கிறீர்கள்?" என கேட்டார். இதற்கு பதிலளித்த அவர் பஞ்சாபை சேர்ந்த இளம் வீரர் சுப்மன் கில்லின் பெயரை தெரிவித்துள்ளார். தற்போது கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் மிகவும் பொறுப்புடனும் சிறப்பாகவும் விளையாடி வருகிறார் என கூறினார்.
மேலும் அவரிடம் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வியான, "இந்த ஐபிஎல் தொடரில் உங்களுக்கு பிடித்த அறிமுக வீரர் யார்?" என்ற கேள்விக்கு பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர் தேவ்துத் படிக்கல் என கூறியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் அவர் தான்.