மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சச்சின் மகள் சாராவுடன் காதலா.? முதல் முறையாக தனது காதல் குறித்து பேசிய சுப்மன் கில்.!
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் – அஞ்சலி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்தவர் சாரா அடுத்து மகன் அர்ஜூன். இவர்களில் அர்ஜூன் தனது தந்தை வழியில் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகிறார். மூத்த பெண்ணான சாரா குறித்துத்தான் இப்போது செய்திகள் வேகம் பிடித்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலிப்பதாக வெகுகாலமாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருவரும் சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும் போது ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சுப்மன் கில், நான் இப்போதும் சிங்கிளாக தான் இருக்கிறேன் என கூறி இந்த கிசுகிசுவுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.