திடீர் ஓய்வை அறிவித்த இந்திய முன்னனி கிரிக்கெட் வீரர்! ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
37 வயதான கவுதம் கம்பீர் 2003 முதல் 2013 வரை இந்திய அணிக்காக அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சச்சினுக்கு பிறகு இந்திய அணியின் சிறந்த துவக்க ஆட்டக்காரராக இவர் திகழ்ந்தார்.
147 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 11 சதங்கள் விளாசி 5,238 ரன்களை குவித்தார். 58 டெஸ்ட் போட்டிகளில் 9 சதமடித்து 4154 ரன்களும் 37 T20 போட்டிகளில் 932 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக இவர் இந்திய அணிக்காக 2016 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் IPL போட்டிகளில் மட்டும் ஆடினார்.
இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்லும்போது 57 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும்போது 97 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார். இவ்வாறு இந்திய அணியின் பல்வேறு போட்டிகளில் வெல்வதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார் கம்பீர்.
இந்நிலையில் தனது ஓய்வு முடிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கம்பீர். அதில், ‘கனத்த இதயத்துடன்தான் மிகக் கடினமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் கனத்த இதயத்துடன் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை அறிவிப்பதாக’ கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
The most difficult decisions are often taken with the heaviest of hearts.
— Gautam Gambhir (@GautamGambhir) December 4, 2018
And with one heavy heart, I’ve decided to make an announcement that I’ve dreaded all my life.
➡️https://t.co/J8QrSHHRCT@BCCI #Unbeaten