மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடராஜனால் நல்வாழ்வு பெற்ற 21 கிராமத்து இளைஞர்கள்.. சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்க தயாராகும் தமிழர்கள்..! மனம்நெகிலும் தமிழ் மக்கள்.!
கிராமங்களில் இருப்போருக்கும் கிரிக்கெட் தெரியவேண்டும், அதனாலேயே எனது பயிற்சி மையத்தை சொந்த ஊரில் ஆரம்பித்தேன். அங்கிருந்து தயாரான பல இளைஞர்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர் என டி. .நடராஜன் தெரிவித்தார்.
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, விருதுபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சேலம் நடராஜனிடம், தொகுப்பாளர் கோபிநாத் பெரிய நகரங்களை விட்டுவிட்டு சின்னப்பன்பட்டியில் கிரிக்கெட் பயிற்சி மைதானம் தொடங்க காரணம் என்ன என கேட்டார்.
அதற்கு பதிலளித்த டி. நடராஜன், "அது எனது ஆசை, எனது அண்ணனின் ஆசை. நான் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு மைதானத்தில் வெறும் காலில் பயிற்சி எடுத்துள்ளேன். நான் படித்த அரசு பள்ளியில் தான் இன்று வரை பயிற்சி எடுக்கிறேன். நான் அவ்வாறான இடத்தில் இருந்து இன்று இவ்வுளவு உயரத்திற்கு வந்துள்ளேன்.
எனது கிராமத்தை சுற்றிலும் 18 பட்டி கிராமங்கள் உள்ளன. அங்குள்ள மக்களுக்கும் கிரிக்கெட் தெரிய வேண்டும். அவர்களும் கிரிக்கெட்டுக்கு முறையான பயிற்சி பெற வேண்டும். நான் பட்ட கஷ்டங்களை பிறர் அடையாமல் எளிய வழியில் முன்னேறி வாழ்க்கையில் விரைந்து நல்வழிப்பட வேண்டும். நகரங்களில் பலரும் பயிற்சி மைதானம் ஆரம்பிக்கலாம். அங்கு அனைவருக்கும் எல்லாம் கிடைக்கும்.
ஆனால், கிராமங்களில் உள்ள மக்களுக்கு அப்படியான வசதிகள் கிடைக்காது. அவர்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதால் மட்டுமே சின்னப்பம்பட்டியில் பயிற்சி மையம் ஆரம்பித்தோம். இன்று மாநில அளவிலான அணியில் 3 பேர், TNPL அணியில் 3 பேர், Chennai Leagueல் 15 பேர் விளையாடுகிறார்கள். எங்கிருந்தாலும் நம்மால் சாதிக்க முடியும் என்பதை வைத்து தொடங்கினோம். நன்றாக போய்கொண்டு இருக்கிறது.
நான் டென்னிஸ் பந்துகளை முதலில் கையில் எடுத்தேன். அதில் இருந்து தான் இங்கு வந்தேன். 20 வயதில் தான் கிரிக்கெட் பந்தை கையால் எடுத்து பார்த்தேன். இன்று வரை பல பேட்டிகளில் டென்னிஸ் பந்துக்கும் - கிரிக்கெட் பந்துக்கும் உள்ள வேறுபாட்டை கேட்டுள்ளார்கள். ஆனால், எனக்கு உண்மையில் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாது.
ஜெ.பி அண்ணன் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. அவர் என்னுடன் பிறந்தவர் இல்லை. இன்று வரை அவர் தான் எனக்கு வழிகாட்டி. நான் வாழ்க்கையில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னடக்கம் ஆகிய 4ஐ கற்றுக்கொண்டேன். ஜெ.பி அண்ணனின் பெயரை நான் பச்சை குத்தியுள்ளது குறித்து வீட்டிலேயே யாரும் கூறுவது இல்லை" என தெரிவித்தார்.
Video Thanks: Vijay Television