#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்தியாவிற்கு வரும் தென்னாப்பிரக்கா அணியில் அதிரடி மாற்றம்! ரசிகர்கள் அதிர்ச்சி
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் பட்டியலை தென்னாப்பிரிக்க வெளியிட்டுள்ளது.
இதுவரை டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வந்த டூப்ளஸிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டிகாக் கேப்டனாகவும் வான்டர் டஸன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடருக்கு டூப்ளஸிஸ் கேப்டனாக நீடிக்கிறார்.
மேலும் டி20 அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெய்ன், நிகிடி மற்றும் கிறிஸ் மோரிஸ் நீக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆம்லா மற்றும் ஸ்டெய்ன் ஓய்வுபெற்றதால் அன்ரிட்ச் நார்ட்ஜ், ரூடி, சேனுரன் முத்துசாமி என மூன்று புதுமுக வீரர்கள் டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
#BreakingNews @QuinnyDeKock69 will captain the T20 squad with @Rassie72 as vice-captain while @tbavuma10 will be the vice-captain to @faf1307 in the Test squad. More info to follow.#ProteasIndiaSquads pic.twitter.com/2hl8aggPL3
— Cricket South Africa (@OfficialCSA) August 13, 2019
டி20 அணி:
டிகாக், வான்டர் டஸன், டெம்பா பவுமா, டாலா, போர்டியூன், பியூரன் ஹென்ரிங்ஸ், ரீஷா ஹென்ரிங்ஸ், டேவிட் மில்லர், ஆன்ட்ரிச் நார்ட்ஜ், பெலுக்வயோ, பிரிஸ்டிரியஸ், ரபடா, ஷாம்சி, ஸ்மட்ஸ்
டெஸ்ட் அணி:
டூப்ளஸிஸ், டெம்பா பவுமா, ப்ரயன், டிகாக், எல்கர், ஹம்சா, கேசவ் மகராஜ், மார்க்ரம், சேனுரன் முத்துசாமி, நிகிடி, ஆன்ட்ரிச் நார்ட்ஜ், பிலாண்டர், டேன் பெய்ட், ரபடா, ரூடி