மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடரை கைப்பற்ற போவது யார்?: இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டி-20 இன்று பெங்களூருவில் தொடக்கம்..!
இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி-20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் முதல் 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும், கடைசி 2போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் தென்னாப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2 வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. பின்னர் 3 வது போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்திலும், 4வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
இந்த நிலையில், தொடரை கைப்பற்றும் அணி எது என்பதை முடிவு செய்யும் கடைசி மற்றும் 5வது டி-20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி எல்லா வகையிலும் போராடும்.
கடந்த 2 போட்டிகளில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கும். எனவே இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.