மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விராட் கோலிக்கு இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும் - பிசிசிஐயில் இருந்து கசியும் தகவல்கள்!
மூன்றுவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் கொடி கட்டி பறந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 70 சர்வதேச சதங்களை அடித்துள்ள அவர் கடந்த மூன்று வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
விராட் கோலி இப்போதைய நிலைமையில் இந்திய அணிக்கு விளையாடுவதை விட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி தனது பழைய பார்மிற்கு திரும்ப வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐயின் முக்கிய நபர் ஒருவர் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடர்தான் விராட் கோலிக்கு கடைசி வாய்ப்பு எனவும் இந்தத் தொடரில் அவர் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லையெனில் நிச்சயம் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு விராட்கோலி தள்ளப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.