#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
TNPL: நாளை முதல் தொடங்குகிறது மினி ஐபிஎல்! அணிகளின் முழு விவரம் இதோ!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் அடுத்ததாக மினி ஐபில் என்றழைக்கப்படும் உள்ளுர் விளையாட்டு போட்டியான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நாளை ஜூலை 19 தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெறவுள்ளது.
ரவுண்ட்ராபின் முறையில் நடைபெறும் இந்த போட்டியானது முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணி குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 போட்டிகளில் விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான அஸ்வின் மற்றும் விஜய் சங்கர் இருவரும் இந்த தொடர் முழுவதும் விளையாட உள்ளனர். மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது. அந்த அணிகளின் விவரம் இதோ.
திண்டுக்கல் டிராகன்ஸ்
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் (சென்னை அணி)
காரைக்குடி காளைகள்
திருச்சி வாரியர்ஸ்
தூத்துக்குடி பேட்ரியோட்ஸ்
மதுரை பாந்தர்ஸ்
கோவை கிங்ஸ்
காஞ்சி வீரன்