மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிரிக்கெட் ரசிகர்களுக்கு உச்சகட்ட விருந்து.! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க காத்திருக்கும் ராஜஸ்தான்.! தகர்க்க நினைக்கும் பெங்களூரு அணி.!
ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி கம்பீரமாக முதல் இடத்தில் இருந்துவருகிறது.
இந்தநிலையில், இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதவுள்ளது. பெங்களூரு அணி தன்னுடைய முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வெற்றிபெற்றது.
இந்தநிலையில், இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசிக்க அதிக ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் பெங்களூரு அணியும் தனது அடுத்த வெற்றியை பதிவு செய்ய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி மேற்கொள்ளும். எனவே இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.