#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்று தொடங்குகிறது டி.என்.பி.எல். தொடர்! முதல் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான அணி மோதுகிறது!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும், டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியானது 2016-ம் ஆண்டு துவங்கியது. முதலாவது சீசனில் தூத்துக்குடி பேட்ரியாட்சும், 2017-ம் ஆண்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கடந்த ஆண்டில் மதுரை பாந்தர்சும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தநிலையில், 4-வது டி.என்.பி.எல். தொடர், திண்டுக்கல் அருகே உள்ள நத்தத்தில் இன்று துவங்குகிறது. ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சி வீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
கிராமப்புறங்களில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு வாய்ப்பு அளித்து அவர்களது தரத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் உருவாக்கப்பட்டது தான், இந்த டி.என்.பி.எல் தொடர்.
அதேபோல், இந்த தொடரில் இருந்துதான், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் முருகன், ஜெகதீன், டி. நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஐபிஎல் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடக்கும் தொடக்க போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ், இந்த தொடரை துவங்கி வைக்கிறார்.
இந்த தொடரில் நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், அபினவ் முகுந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு அஸ்வின் கேப்டனாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.