ரிஷப் பந்த் அடித்த அடியில் கண்ணீர் விட்டு அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்



Tom moody cries on fire of risaph pant

2019 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்தது. 

IPL 2019

அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரித்திவ் ஷா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். டெல்லி அணி எளிதில் வென்றுவிடும் போல் தோன்றியது.  ஆனால் ஒரு கட்டதத்தில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 

டெல்லி அணியின் ரிஷப் பந்த் மட்டும் நம்பிக்கையாக நின்று ஆடினார். டெல்லி அணி வெற்றிபெற கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் பாசில் தம்பி வீசினார். 

IPL 2019

அப்போது பேட்டிங் செய்த ரிஷப் பந்த் தொடர்ந்து 4, 6, 4, 6 என முதல் நான்கு பந்திலே 20 ரன்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் ஆட்டத்தை வென்றுவிடலாம் என கனவு கண்ட ஹைதராபாத் அணிக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது. அந்த ஓவரில் ரிஷப் பந்த அடித்ததை பார்த்த ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கண்ணீர் விட்டு அழுதார். 

கடைசியில் ரிஷப் பந்த் 19 ஆவது ஓவரில் அவுட்டாக டெல்லி அணி போராடி கடைசி ஓவரில் வென்றது. 21 பந்துகளில் 49 ரன்கள் அடித்த ரிஷப் பந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.