மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ... என்னாச்சு.? காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் வீரர்கள்.!
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து முடிவடைந்தது.12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த குத்து சண்டை வீரர்கள் 2 பேர் சென்று உள்ளனர்.
இந்தநிலையில், பாகிஸ்தானை சேர்ந்த சுலேமான் பலூச் மற்றும் நசீர் உல்லா ஆகிய அந்த 2 பேர் தங்களது பயிற்சியாளரிடம் கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் திரும்பவில்லை. இதனையடுத்து அந்த இரண்டு குத்து சண்டை வீரர்கள் அறையின் பூட்டை உடைத்து, அதிகாரிகள் உள்ளே சென்றனர்.
ஆனால், அறைக்குள் அவர்களது உடைமைகள் மட்டுமே இருந்துள்ளன. இதுகுறித்து இங்கிலாந்து அரசிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த இரண்டு வீரர்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் வீரர்கள் இன்று நாடு திரும்ப வேண்டிய சூழலில் அவர்கள் இருவரும் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள் குழு நாட்டுக்கு புறப்பட்டது.