திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
90’s கிட்ஸ்களால் கொண்டாடப்பட்ட WWE ரெஸ்ட்லிங் வீரர்! WWE- ல் இருந்து விடைபெற்றார்!
கடந்த 30 வருடங்களாக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டின் மிகப்பெரிய ஜாம்போவான் என்று கருதப்படும் அண்டர்டேகர், ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். "தி லாஸ்ட் ரைடு" என்ற தொடரில் தன் முக்கிய போட்டி அனுபவங்களை பகிர்ந்து வந்தார் அண்டர்டேக்கர். அந்த தொடரின் கடைசி பகுதியில் தான் இனி ரிங்கில் வந்து சண்டையிட ஆசையில்லை என கூறி தன் ஓய்வை அறிவித்தார்.
உலகில் 90’s கிட்ஸ்களால் கொண்டாடப்பட்ட WWE ரெஸ்ட்லிங் மல்யுத்தப் போட்டி, இன்றளவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. 90’s கிட்ஸ் பள்ளி பருவத்தில் WWE ரெஸ்ட்லிங் போட்டிகளை பற்றி பேசாத நாட்களே இருக்காது. இதில் கோல்ட் பர்க், பிக் சோ, ராக், பட்டிஸ்டா, ட்ரிபிள் எச், ஸ்டீவ் ஆஸ்டின், கெயின் என பல்வேறு வீரர்களுக்கும் தனித்தனியே ரசிகர்கள் இருந்தாலும், WWE-ல் அண்டர்டேக்கருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
போட்டியின்போது சவப்பெட்டிக்குள் அடிக்கடி சென்று வருவது போன்ற திகிலூட்டும் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அண்டர் டேக்கர். இவருக்கு இறப்பு இல்லை, 7 உருவங்கள் உண்டு என்ற பல்வேறு கதைகள் பேசப்பட்டது. இதனால் இவருக்கு டெட்மேன் என்ற பெயரும் ரசிகர்களால் வழங்கப்பட்டுள்ளது.