இந்திய அணிக்கு அடுத்து ஒரு யுவராஜ் சிங் கிடைத்துவிட்டார்.! இந்திய அணியின் முன்னாள் வீரர் ஓப்பன் டாக்.!



venkadesh prasath talk about yuvaraj

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2020 ஐபிஎல் சீசன் முடிந்தவுடன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரை ஆடவுள்ளது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாய் அமைந்தது. இந்தநிலையில் யுவராஜ் சிங்கை ஞாபகப்படுத்தும் அளவிற்கு படிக்கல் விளையாடுகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். ஆனால் படிக்கல் தற்போது இந்திய அணியில் இடம்பெறவில்லை.

படிக்கல் கடந்த சீசனில் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்தார். அனால் போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த சீசனில் பார்த்திவ் படேலுக்கு மாற்றாகக் களமிறங்கி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி, பல நேரங்களில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்துள்ளார். இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 422 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு விளையாடாத ஒருவர் அறிமுக சீசனில் அதிக ரன்கள் எடுத்தோர் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

padikal

இந்நிலையில், படிக்கல்லின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி தேர்வாளருமான வெங்கடேஷ் பிராசாத், இளம் யுவராஜ் சிங்கை ஞாபகப்படுத்தும் அளவிற்கு தேவ்தத் படிக்கல் விளையாடுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.