மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோனியின் ரசிகர்களுக்கு இலவசம்! பிரபல ஹோட்டலின் அட்டகாசமான அதிரடி ஆஃபர்
மேற்கு வங்கத்தில் ஹோட்டல் நடத்தி வரும் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் அனைத்து தோனி ரசிகர்களுக்கும் இலவசமாக சாப்பாடு வழங்கி வருகிறார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஆலிப்புர்துவார் பகுதியில் ஷம்பு போஸ் என்ற இளைஞர் ஒரு சிறிய உணவு விடுதி நடத்தி வருகிறார். இவர் சிறிய வயதிலிருந்தே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தீவிர ரசிகர்.
32 வயதான அந்த இளைஞரின் ஹோட்டல் பெயர் "எம்எஸ் தோனி ஹோட்டல்". இந்த ஹோட்டலின் சிறப்பு சலுகை என்னவெனில் தோனியின் தீவிர ரசிகர்கள் அனைவருக்கும் இலவச உணவு. நீங்கள் தோனியின் ரசிகராக இருந்தால் அங்கு சென்று இலவசமாக சாப்பிட்டுவிட்டு வரலாம்.
இதுகுறித்து பேசியுள்ள ஷம்பு, "அடுத்து துர்கா பூஜை வந்தால் இந்த ஹோட்டல் ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகிவிடும். இந்த சுற்றுவயட்டாரத்தில் தோனி ஹோட்டல் எங்கே உள்ளது என கேட்டால் அனைவரும் வழி சொல்லுவார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டது தோனி ஹோட்டல்.
தோனியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பினை பற்றி பேசிய ஷம்பு, "சிறிய வயதிலிருந்தே நான் தோனியின் தீவிர ரசிகன். தோனி ஆரம்பகாலத்தில் தலையில் நிறைய முடியுடன் ஆடியதிலிருந்தே நான் அவரது தீவிர ரசிகனாக மாறிவிட்டேன். என்னுடைய அனைத்து செயல்களுக்கும் தூண்டுதல் அளிப்பவர் அவரே.
எனக்கு தோனியை மைதானத்திற்கு சென்று நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. ஆனால் போதிய பணம் கிடைக்கவில்லை. எனது கனவு ந3றைவேறுமா என்பது தெரியவில்லை; அப்படி நிறைவேறினால் தோனியை எனது ஹோட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைப்பேன். அவருக்கு சாதம் மற்றும் மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் என்று எனக்கு தெரியும்" என கூறியுள்ளார்.
இவ்வளவு பெரிய ஆசையுடன் தோனி ரசிகர்களுக்கும் இலவசமாக சாப்பாடு வழங்கி வரும் அவரின் தோனி ஹோட்டலின் சுவர் முழுவதும் தோனியின் படங்கள் தான் ஒட்டப்பட்டுள்ளன.