ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சிக்ஸர் லயனில் பறந்து அபாரமாக கேட்ச் பிடித்த விராட்! குல்தீப்பின் அனல் பறக்கும் ஹாட்ரிக் விக்கெட்! வைரல் வீடியோ!
இந்தியா-வெஸ்டின்ஸ்டிஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்துள்ளது. நேற்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தன்னுடைய அசத்தலான பந்து வீச்சின் மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
வெஸ்டின்ஸ்டிஸ் அணி வீரரான ஹோப் தன்னுடைய அதிரடி ஆட்டம் மூலம், இந்திய அணிக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தினார். ஹோப் அதிரடியாக ஆடியபோது குல்தீப் யாதவின் பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடித்தார் அப்போது லெக் திசையில் நின்று கொண்டிருந்த விராட் கோலி அபாரமாக கேட்ச் பிடித்தார்.
அடுத்தபடியாக வந்த ஹோல்டரை ரிஷ்ப்பாண்ட் தன்னுடைய அற்புதமான ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார். அதனையடுத்து களமிறங்கிய அல்சாரி ஜோசப்பின் விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுக்க வேண்டும் என்பதற்காக, கேதர் ஜாதவ்வை இரண்டாவது சிலிப்பாக நிறுத்தி, அதற்கு ஏற்ற வகையில் பந்து வீசி குல்தீப் யாதவ் அவரின் விக்கெட்டை வீழ்த்தி குல்தீப் யாதவ்விற்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்தது.