திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்ன நடந்துச்சு..? போட்டிக்கு நடுவே மோதிக்கொண்ட விராட் - பட்லர்.. பரபரப்பை கிளப்பிய திடீர் சம்பவம்..
நேற்றைய போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட்கோலி மற்றும் இங்கிலாந்து வீரர் பட்லர் இருவரும் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி T20 போட்டி நேற்று அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 224 ரன்கள் அடித்தது. இதன்மூலம் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய், ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார்.
ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மலான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை ஆடினர். இதனால், இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் மிகவும் அதிகரித்தது.
இந்நிலையில் 13 வது ஓவரை இந்திய அணி வீரர் புவனேஷ்வர் குமார் வீசிய நிலையில், பவுண்டரி அடிக்க எண்ணி, ஓங்கி அடித்த பட்லர், சிக்ஸ் லைனுக்கு அருகே பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இக்கட்டான நிலையில் பட்லரின் விக்கெட் இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில் பட்லர் ஆட்டம் இழந்து வெளியேறியபோது இந்திய கேப்டன் கோலி மற்றும் பட்லருக்கு இடையே, சிறிதாக வாக்குவாதம் நடந்தது. பட்லர் ஆட்டம் இழந்ததை இந்திய வீரர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த போது, வெளியே வெளியே சென்றுகொண்டிருந்த பட்லரை பார்த்து கோலி வேகமாக ஏதோ பேசிக் கொண்டே, நடந்து சென்றார்.
பதிலுக்கு, பட்லரும் ஏதோ கூற, இந்த சம்பவம் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. கோலி - பட்லர் இடையேயான வார்த்தை மோதல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Bhuvneshwar ki मक्खन गेंदबाजी पर फिसल गए Butler 😜#INDvsENG pic.twitter.com/MI0i9HaQEZ
— pakas2009@gmail.com (@pakas2009) March 20, 2021