மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய கோலி.! ஆச்சரியத்தில் மூழ்கிய அனுஷ்கா! இணையத்தை கலக்கும் வீடியோ இதோ !!
கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து, வெற்றி நாயகனாக கொடிகட்டி பறப்பவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவருக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவருடன் ஒரு புகைப்படம் மற்றும் ஆட்டோகிராப் வாங்க பலரும் ஆர்வத்துடன் காத்துக்கிடக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 வது கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த 7 வயது சிறுவன் ஒருவன் விராட் கோலியிடம் உங்களுக்கு என்னுடைய ஆட்டோகிராப் வேணுமா என கேட்டுள்ளார். இதனை கேட்டு ஆச்சரியமடைந்த விராட் கோலி மிகவும் உற்சாகத்துடன் வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுவன் விராட் கோலிக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார்.
இதனை அவரது மனைவி அனுஷ்கா சர்மா அருகில் நின்று சிரித்தவாறே ரசித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விராட் கோலியின் இந்த அன்பான குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
My 7 year old nephew, who is in Jamaica for the first test , caught @imVkohli off-guard when he went up to him and told him "would you like my autograph instead?".Stopped in his tracks and indulged him. Anushka too.. 😍😍 #kohli #ViratKohli #INDvsWI pic.twitter.com/9giCgJr3oB
— Amit Lakhani (@VeniVidiVici_08) September 2, 2019