இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ். புதிய சரித்திரம் படைத்தார் கேப்டன் விராட்கோலி!



virat-kohli-top-scored-batsman-in-test-cricket

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்டிண்டிஸ் அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோழி  45 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  அதிக ரன்கள் குவித்த ஆசிய கேப்டன்கள் வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பாஹ் உல் ஹக்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

Virat Kohli

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பாஹ் உல் ஹக் மொத்தம் 56 போட்டிகளில் விளையாடி இதுவரை 4214 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் விராட் கோஹ்லி 42 போட்டிகளில் 4233 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.