கங்குலி சொன்னது பச்சைப் பொய்..! உண்மையை போட்டுடைத்த விராட் கோலி.!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர் மற்றும் 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. அங்கு முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒருநாள், டி20 அணிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படவுள்ளார். இந்திய அணி நாளை தென் ஆப்பிரிக்கா புறப்படவுள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விராட் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என முடிவு செய்தது என்னுடைய தனிப்பட்ட முடிவு, இதை நான் சரியான முடிவு என்று நினைத்ததன் காரணமாகவே விலகினேன், கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என பிசிசிஐ-ல் இருந்து யாரும் கூறவில்லை என்று கூறினார்.
சில தினங்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டி ஒன்றில், டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தான் கூறியதாக தெரிவித்தார். ஆனால், தற்போது விராட் கோலி பிசிசிஐ-ல் இருந்து யாருமே கூறவில்லை என்று தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.