முதல் ஆட்டத்திலே இந்தியா-பாகிஸ்தான் மோதல்.! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை சந்தித்து பேசிய விராட் கோலி.! வெளியான வீடியோ



virat-talking-with-pakistan-captain

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது, செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ளது.இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை நடைபெறும் ஆண்டில், ஆசியக் கோப்பையிலும் அதே வடிவத்தை கடைப்பிடிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

எப்போதும் போல் இந்த முறையும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான போட்டி முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் விளையாடிய போது இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.

இதனால் இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சந்தித்துள்ளார். இருவரும் பேசிக்கொண்ட வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.