இன்று நடக்கவிருக்கும் இந்தியா-இங்கிலாந்து அரைஇறுதி ஆட்டம்.! உலக சாதனை படைக்கவிருக்கும் விராட் கோலி.!
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.
இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் விராட் கோலி 42 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 4 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்திய பொறுத்தவரையில் விராட் கோலி தெறிக்கும் பார்மில் உள்ளார். உலகக்கோப்பையில் விராட் கோலி அதிரடி காட்டுவது வழக்கமான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.
இந்திய அணியில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளனர். விராட் கோலி நடப்பு T20 உலகக்கோப்பை தொடரில் 3 அரை சதங்களை விளாசி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 246 ரன்கள் எடுத்துள்ளார். இந்தநிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் விராட் கோலி 42 ரன்களை கடந்து சாதனை படைப்பார் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.