#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உலகமே முடிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்ல.! செம டென்ஷனான விராட்கோலி..! முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி.!
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20, ஒருநாள் போட்டிகளை அடுத்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. 5 T20 போட்டிகளிலும் வெற்றிபெற்று மகிழ்ச்சியில் இருந்த இந்திய அணி அடுத்தாக நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, இந்த போட்டியில் டாஸ் ஜெயிப்பது என்பது மிக முக்கியமான விஷயம். டாஸில் தோற்றிருக்க கூடாது. அதே நேரம், நியூசிலாந்து அணிக்கு சவால் விடும் வகையில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை.
இந்திய அணியின் பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை, மேலும் வீரர்களின் மோசமான பேட்டிங்கித்தான் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது, ஒரு டெஸ்ட் தோல்வியை மட்டும் வைத்து கொண்டு எங்களை மோசமான அணி என்று கூறிவிட இயலாது.
அதேபோல், இந்த போட்டியில் தோற்றத்தால் உலகமே முடிந்துவிட்டது என்று இல்லை, நிச்சயம் அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைப்போம் என விராட்கோலி கூறியுள்ளார்.