மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டி-20 போட்டிகளில் முதல் இரட்டை சதம்: அபார ஆட்டத்தால் வரலாறு படைத்த வெ.இண்டீஸ் வீரர்..!
அமெரிக்கா, அட்லாண்டா நகரில் அட்லாண்டா ஓபன் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற லீக் போட்டியில், அட்லாண்டா பையர் மற்றும் ஸ்கொயர் டிரைவ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற அட்லாண்டா பையர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து அந்த அணியின் இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரஹீம் கான்வெல்-ஸ்டீபன் டைலர் ஜோடி தொடங்கியது. தொடக்க ஜோடியினர் இருவரும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடியது.
இந்த போட்டியில் அட்லாண்டா பையர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வெல் 77 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் 22 சிக்ஸர் உட்பட 205 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அந்த அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டைலர் 53 (18), முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சமி அஸ்லாம் 53 (29) ஆகியோரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிறகு 326 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை எந்த சர்வதேச வீரரும் இரட்டை சதம் அடித்தது இல்லை. 20 ஓவர் போட்டிகளில் சதமடிப்பதே பெரிய சாதனையாக கருதப்பட்டு வரும் நிலையில் கான்வெல் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். அட்லாண்டா ஓபன் தொடர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்படாத தொடர் என்பதால், டி-20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கிறிஸ் கெய்ல் ஒரு போட்டியில் 175 ரன்கள் எடுத்ததே இது வரை சாதனையாக உள்ளது.