#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
8.4 கோடிக்கு ஏலம் போன தமிழக மாயாஜால பந்துவீச்சாளர்! யார் அந்த வருண் சக்கரவர்த்தி
ஐபிஎல் 2019 சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது. இதில், மொத்தமாக 350 வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் 228 பேர் இந்தியர்கள். ‘பிங்க் சிட்டி’ என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூரில், மதியம் 3.30 மணியளவில் ஐபிஎல் ஏலம் தொடங்கியது.
கடந்த சீசனைப் போல, இம்முறையும் ஜெயதேவ் உணட்கட் அதிக தொகைக்கு விலை போயுள்ளார். 8.40 கோடிகளை கொட்டிக் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
அதே சமயம் அவருக்கு இணையாக தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதே 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ 20 லட்சத்தில் தொடங்கிய இவரது தொகை ரூ 8.40 கோடிக்கு முடிவுக்கு வந்தது.
தமிழக மாயாஜால பந்துவீச்சாளரான இவர் டி.என்.பி.எல் வில் மதுரை அணிக்காக விளையாடியவர். இவர் சிறந்த ஆல் ரவுண்டரும் ஆவார். 2019 ஐபிஎல் தொடர் தான் இவருக்கு முதல் தொடராகும். தனது முதல் சீசனிலேயே அதிக தொகைக்கு ஏலம் பெறப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் வருண்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணிக்காக ஆடினார். இந்த தொடரில் 9 ஆட்டங்களில் இவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பள்ளி பருவத்திலிருந்தே கிரிக்கெட் விளையாட துவங்கிய இவர் SRM பல்கலைக்கழகத்தில் ஆர்கிடெக்ட் முடித்து 2 வருடங்கள் வேலைக்கு செல்லும் வரை கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தியுள்ளார். பின்னர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு ஒரு மாயாஜால சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.
இவர் கடந்த 2018 ஐபில் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் வலை பயிற்சியின் போது அவர்களுக்கு பந்து வீசியுள்ளார். பின்னர் சென்னையில் ஆட்டங்கள் ரத்து செய்யப்படவே கொல்கத்தா அணி வீரர்களுக்கு பந்து வீச அழைக்கடப்பட்டார். அங்கு அவருக்கு உலகின் சிறந்த ஸ்பின்னர்களான சுனில் நரைன், குலதீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகியோரருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுனில் நரைனின் பயிற்சியாளர் கார்ல் க்ரோவுடன் பல நுணுக்கங்களையும் கற்றுள்ளார்.
அடுத்த ஐபிஎல் சீசனுக்கான தொடருக்கு அதிக விலைக்கு தமிழக வீரர் ஏலம் போய் இருப்பது நமக்குபெருமை தான். அதே போல் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என நாம் அனைவரும் வாழ்த்துவோம்.